fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடீசியா அரங்கில் ‘ஷாப்பிங் திருவிழா’ கலெக்டர் சமீரன் 23ம் தேதி தொடங்கி வைக்கிறார்

கோவை கொடீசியா அரங்கில் ‘ஷாப்பிங் திருவிழா’ கலெக்டர் சமீரன் 23ம் தேதி தொடங்கி வைக்கிறார்

கோவை கொடிசியா இன்டெக் தொழில்நுட்ப மையத்தால் நடத்தப்பட் டுவரும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 வருகிற 23 ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது

இது குறித்து கொடிசியா தலைவர் திருஞானம், செயலாளர் சசிகுமார், கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 தலைவர் ராஜேந்திரன், உதவி தலைவர் நந்தகோபால் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-கோவை கொடிசியா அரங்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 எட்டாவது பதிப்பாக வருகிற 23ம் தேதி தொடங்குகிறது.

வருகிற ஜனவரி 1ம் தேதி முடிய 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கோவை மாவட்ட கலெக் டர் சமீரன் தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் 270க்கும் மேற்பட்ட அரங்குகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இடம்பெறுகின்றன.

இந்த கண்காட்சி அரங்கில் வீட்டு உபயோக சாதனங்கள், சூரிய ஒளி சாதனங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள், பர்னிச்சர் வகைகள், ஜவுளி மற் றும் நவீன ஆடை வகைகள், சமையல்அறை சாதனங்கள், நவீன ஓவியங்கள், இயற்கை உணவுகள், பூஜை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நுழைவு கட்டணம்

இந்த கண்காட்சியைக் காண நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 50 ரூபாய் நிர் ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இந்த கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் வருகிற 24-ம் தேதி பழ கருப்பையா, மோகனசுந்தரம் பங்கு பெறும் பட்டிமன்றம் நடக்கிறது.

அதே போன்று 30ம் தேதி சாலமன் பாப்பையா மற்றும் ராஜா, பாரதி பாஸ்கர் பங்குபெறும் பட்டிமன்றம் நடக்கிறது. 25ஆம் தேதி சென்னை லஷ்மன் சுருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல் வேறு வகையான இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இங்கு விற்பனையாகும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு.

கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாள் மாலையிலும் சின்னத் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img