fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் நன்றி

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் நன்றி

தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சிஎம் ஆரம் பப்பள்ளியில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய “ஓய்வூதியர் தின விழா” நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பிதேலிஸ் வல்தாரீஸ் தலைமை தாங்கினார், தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநகர தலைவர் இரா.மாடசாமி, காவல்துறை ஓய்வுபெற்ற காவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலை வர் அந்தோணிச்சாமி வரவேற்புரை வழங்கினார்.

காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கீதா செல்வமாரியப்பன், வருவாய்துறையில் ஓய்வு பெற்ற பிச்சையா கர்டோசா, நகராட்சி பணியில் ஓய்வுபெற்ற குமரகுரு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அரசு ஊழியர்கள் கோரிக்கை

கூட்டத்தில் அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அக விலைப்படி வழங்க வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் டிசம்பர் மாதம் மாநாடு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது சுல்தான் சாகிப், மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் அல் போன்ஸ்அம்மாள், மேரி, ஜவகர்லால் நேரு, ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க நிர்வாகிகள் அய்யம் பிள்ளை, நயினார், குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா நிறைவில் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆனந்தன் நன்றியரையாற் றினார்.

படிக்க வேண்டும்

spot_img