fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வி நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

“உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகள்

தலைமை விருந்தினர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வி நிறுவன முன்னாள் துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், “உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகள். அணுகக்கூடிய மற்றும் சமமான உலகில் தேவையை பூர்த்தி செய்வதில் புதுமையின் பங்கு” என்ற தலைப்பில் பேசினார்.

துணைவேந்தர் முனைவர் ஏ.பாரதி ஹரிசங்கர், தலைமை தாங்கி பேசும்போது, மக்களிடையே உள்ள பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தி, மாற்றுத்திறனாளிகளி டையே உள்ள தனிப்பட்ட திறன்களை அடையாளம் கண்டுணர வேண்டும். அவர்களின் தேவைகள், உரிமைகள் மற்றும் சமவாய்ப்புகள் குறித்து வலியுறுத்தினார்.

பதிவாளர் முனைவர் எஸ்.கௌசல்யா , ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன் தலைவர் முனைவர் ஜி.விக்டோரியா நயோமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, சுவரொட்டி போன்ற போட்டிகளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, பாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

சிறுவயது மாணவர்களுக்கான இசைநாற்காலி, உருளைக்கிழங்கு சேகரிப்பு, ஓட்டப் பந்தயம் மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் பாடல் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் கல்வித் துறை மாணவர்களால் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளான பாட்டு, நடனம், கவிதை, பாகமேற்று நடித்தல், சைகை நாடகம் ஆகியவையும் நடத்தப்பட்டன.

சிறப்புக் கல்வித் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியை முனைவர் மு. சம்பத்ராணி வரவேற்றார். சிறப்புக் கல்வித் துறை உதவிப் பேராசிரியை மு.கலைவாணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img