இந்தியாவின் முன்னணி தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம்(RGICL), காப்பீட்டுத்துறைப் பிரிவுகளிலேயே முதன் முதலான ஹெல்த் இன்ஃபினிட்டி பாலிசி என்ற எல்லையற்ற நன்மைகளை வழங்கும் ஒரு பிரீமியம் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த தனித்துவமான காப்பீட்டுத் திட்டத்தில் அதிகளவில் கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் மோர்குளோபல் கவர், மகப்பேறு கவர், OPD கவர், காப்பீட்டுத் தொகையின் வரம்பற்ற மறுசீரமைப்பு வசதி மற்றும் கூடுதலாக 15 ஆட்-ஆன் பலன்கள் போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களும் அடங்கியுள்ளது.
இந்தியாவில் முதல் முதலாக காப்பீட்டுத் தவணைத் தொகை மீது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலான தள்ளுபடி மற்றும் பிஎம்ஐ அடிப்படையிலான தள்ளுபடியை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிதி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆக இரண்டிலும் சிறப்பான தகுதி நிலையில்இருப்பதற்கான வெகுமதியை இது வழங்குகிறது.
‘மோர்- பெனிஃபிட்’
ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி பாலிசியின் ‘மோர்- பெனிஃபிட்’ கூடுதல் நன்மைக்கான விருப்பத்தேர்வுகள்- கூடுதலாக உலகளவில், கூடுதல் காப்பீட்டுத் தொகை மற்றும் கூடுதல் கால அளவு (மோர் குளோபல், மோர் இன்சூரன்ஸ் கவர் மற்றும் மோர் டைம்)- ஆகியவை, வாடிக்கையாளர்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதற்கான காப்பீட்டுத் தேவைகளை எந்தவித சமரசமும் பிரச்சினையுமின்றி நிறைவு செய்து கொள்ள உதவுகின்றன.
இந்த பலன்கள், காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு மேலாக 30% வரை கூடுதல் காப்பீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, அதன் மூலம் ஒட்டுமொத்த காப்பீட்டுப் பலனையும் அதிகரிக்கிறது. ‘மோர் டைம்’ பலன்கள் 12 மாதங்களுக்குப் பதிலாக 13 மாத காலவரையறையுடன் கூடிய ஒரு நீண்ட கால காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறும்போது, 1, 2 அல்லது 3 வருட கால வரையறைகளோடு கூடிய ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஃபினிட்டி காப்பீட்டுத் திட்டத்தை நிறுவனத்தின் இணையதளம் www.reliancegeneral.co.in), 75000 இடையீட்டாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 131 கிளை அலுவலகங்களில் வாங்கலாம் என்றார்.



