fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் கருந்தரங்கு

ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் கருந்தரங்கு

தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கத்துடன் இணைந்து மருந்தாக்கியல் கல்லூரி ஸ்ரீராமகிருஷ்ணா இணை மருத்துவக் கழகம் நடத்திய ஒரு நாள் தேசிய கருத் தரங்கு, மருந்தியல் பரிந்துரை “மருந்தாளுநர்களின் அறிவு மற்றும் பயிற்சியை ஒருங்கிணைப்பதில் உள்ள உத்திகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் டி.கே. ரவி வரவேற்றார்.

எஸ்என்ஆர் அறக்கட்டளை

எஸ்என்ஆர் அறக்கட்டளை அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணசுவாமி தலைமை தாங்கி, மருந்தியலில் மருந்தாளுநர்களின் அறிவு மற்றும் பயிற்சியை ஒருங்கிணைப்பதையும், நோயாளிகளின் சேவையில் அதன் பயன் மற்றும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில மருந்தாளுநர் சங்க பதிவாளர் முனைவர் எம்.தமிழ் மொழி பேசும்போது, மருத்துவ பயிற்சியில் மருந்தாளுநர்களின் வாய்ப்புக்களையும் அதன் ஒழுங்கு முறைகளையும் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் செயல்படுத்தி வருவதை குறிப்பிட்டார்.

கௌரவ விருந்தினர் உதகை ஜேஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் கே.பி.அருண் பேசும்போது, மருந்தியலில் பல்வேறு உட்பிரிவுகளின் அறிவை வளர்த்துக் கொள்ளுதலையும், நோய் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு சேவையில் மருந்தாளுநர்களின் தேவையையும் வலியுறுத்தினார்.

ஸ்ரீமருத்துவமனை மருத்துவர்கள் இருதய நிபுணர் டி.ஆர்.நந்தகுமார், நரம்பியல் நிபுணர் கே.ராமதாஸ், சுரப்பியல் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் சுரேஷ் தாமோதரன் ஆகியோர் மருந்தாளுநர்களின் பங்களிப்பை பற்றி பேசினர்.

கேஎம்சிஹெச் மருந்தாக்கியல் கல்லூரி, பார்மஸி பிராக்டீஸ் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சாலினி சிவதாசன், ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரி இணைப்பேராசிரியை முனைவர் மஞ்சுளா தேவி, கேஎம்சிஹெச் மருந்தியல் பரிந்துரை மருந்தாளுநர் காயத்ரி கோவிந்தராஜ் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த வளர்ச்சியில் மருந்தாளுநர்களின் பங்களிப்பை விளக்கினர்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ்.ஸ்ரீராம் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் எம்.கோபால்ராவ் நன்றி கூறினார்.

வெவ்வேறு மாநில மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img