சேலம் தமிழ்நாடு கூட்டுறவு தணிக் கைத் துறை அலுவலர் சங்கத்தின், மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் மற்றும் 96-வது மாநில மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தலைமை நிலைய செயலாளர் அருணாசலம் வரவேற்றார்.சிறப்பு அழைப் பாளர்களாக கௌரவத் தலைவர் செல்வம், நிறுவனத் தலைவர் கோவிந்த இராசன், பச்சையப்பன், ஜோதிராஜ், செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில நிர்வாகிகள் சண்முகசுந்தரம், துரைக்கண்ணன், பிரபாகரன், பெரியசாமி, காளியப்பன், மாதர்சாமி, சோமு, விஜயகுமார், கணேசன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கங்கா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐந்து துறைகளின் தலைமை
இதில் தமிழ்நாடு அரசு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தணிக்கைத் துறை உள்ளடங்கிய ஐந்து துறைகளின் தலைமை தணிக்கை இயக்குநர் பணியிடத்தை உருவாக்கி தணிக்கை துறைக்கே வலுசேர்த்த முதல்வர் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மண்டலச் செயலாளர்கள், சட்டப்பிரிவு செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.