fbpx
Homeபிற செய்திகள்சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மையம்

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மையம்

தற்போதைய சூழலில் பல் சம்பந்தமான பிரச்சினைகள் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகி விட்டது. இதற்கு சிறந்த தீர்வளிக்கும் விதமாக சவீதா பல் மருத்துவ கல்லூரியின் வாய்வழி உயிரியல் பிரிவின் பல்துறை ஆராய்ச்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது அனைத்து பல் சம்பந்தமான சிறப்புகளுக்கும் அடித்தளமாக உள்ளது. பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல் வளர்ச்சி குறைபாடுகளை சரி செய்வதற்கும், குணப்படுத்துவதற்கும் அல்லது தடுப்பதற்கும் புதிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளை உருவாக்குவதற்கான சவால்களைச் சந்திக்கும் வகையில் அடிப்படை அறிவியல் துறைகளைக் ஒன்றிணைக்கிறது. இத்துறை முதுகலை பாடத் திட்டங்களையும் கொண்டுள்ளது.

உயிரியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கு பல்வேறு உயிரினங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. பல் உடற்கூறியல் மற்றும் பரிணாம உயிரியல் தொடர்பாக மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு உயிரியல் வகை சார்ந்த அருங்காட்சியகமும் இங்கு உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இங்கு சிறப்பு வாய்ந்த உயிரின வகைகள் இடம் பெற்றுள்ளன. இதில் செல் உயிரியல், வாய்வழி நுண்ணுயிர், நோய் எதிர்ப்பு மற்றும் நிணநீர், உணர்திறன் நரம்பியல் மற்றும் வலி வழிமுறைகள், எலும்பு உயிரியல், முக சீரமைப்பு, உமிழ்நீர் எக்சோசோம்கள், உயிர் பொருட்கள், உயிரினங்களின் இயக்கம் மற்றும் திசுக்கள் செயல்பாடு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் உயிரியல் பல் மருத்துவம், கால்நடை பல் அறிவியல் மற்றும் பல் வடிவமைப்பு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆராய்ச்சிப் பகுதிகள்

முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளைப் பொறுத்தவரை உமிழ்நீர் பகுப்பாய்வு (வாய் புற்றுநோய், கவனக்குறைவு நோய்க்குறி, நோய் அறிகுறி), உமிழ்நீர் கண்டறிதல் (புற்றுநோய் அபாய நிலை, பல் எலும்பு சிதைவு, பல்லுறுப்பு ஆரோக்கியம், உள்வைப்பு ஆரோக்கியம்), நோய் மாதிரியாக்கம், வாய்வழி நுண்ணுயிர்கள் உள்ளிட்ட முறையான ஆரோக்கியம், முக சீரமைப்பு மற்றும் உயிரியல் சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சிகளும் அடங்கும்.

இந்த துறை திசு மீளுருவாக்க பரிசோதனைகள் மற்றும் வாய்வழி நோய்களுக்கான தாவரங்கள் அல்லது மூலிகைகளிலிருந்து பெறப்பட்ட மருந்துகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மண் இல்லாமல் தண்ணீரில் தாவரங்களை வளர்க்கும் முறையையும் கடைபிடித்து வருகிறது. இது ஆராய்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் பல் மற்றும் விலங்கு திசு களஞ்சியத்தை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img