கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வடவள்ளி, வள்ளலார் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர்கள் சவிதா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



