fbpx
Homeபிற செய்திகள்ஸ்வச்சதா மிஷன்: மலுமிச்சம்பட்டியில் துப்புரவுப் பணி

ஸ்வச்சதா மிஷன்: மலுமிச்சம்பட்டியில் துப்புரவுப் பணி

உள்ளூர் பஞ்சாயத்து ஆதரவுடன் சம்ஹிதா அகாடமி, மலுமிச்சம்பட்டி மாணவர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுப்புறத்தை தூய்மை யாக/பிளாஸ்டிக் இல்லாத பழக்கத்தை ஏற்படுத்தவும், சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்/ குப்பையின் அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ளவும், ஸ்வச்சதா மிஷன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தூய்மைப் பணி அண்ணாபுரம் சாலையில் சம்ஹிதா அகா டமியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களால் இயக்கப்பட்டது.

சம்ஹிதா அகாடமி

சம்ஹிதா அகாடமி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஷ் தலைமையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 5 பேர் உட்பட 67 மாணவர்கள், 48 பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலையின் இருபுறமும் கொட்டப்படும் குப்பையை, மாணவர்கள்/ஊழியர்கள் எடுத்து, அதை அகற்ற மலுமிச்சம்பட்டி ஊராட்சி வழங்கிய வாகனங்களில் ஏற்றினர்.

மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி அறிந்து கொள்ள மாணவர்களுக்கு உத்வேகமாகவும், சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு அந்த பகுதியை எப்போதும் தூய்மையாக/பிளாஸ்டிக் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தியது.

ஊராட்சி மன்றத் துனணத் தலைவர் சதீஷ், பள்ளி மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் கல்வி கற்பதோடு, இது போன்ற அவசர கால செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட ஊக்குவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img