fbpx
Homeபிற செய்திகள்கே.பி. ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘மினி மாரத்தான்’

கே.பி. ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘மினி மாரத்தான்’

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் “மனநலம் பேணுதல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு” ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோமீட்டர் பிரிவுகளில் நடைபெற்றன.

ஐந்து கிலோமீட்டர் பிரிவில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி, மாணவர்கள், கல்லூரி மாணவிகள், அனைத்து பிரிவு பெண்கள், கேபிஆர் மில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் ஆகியோருக்காக, கணியூர் சுங்கச்சாவடியில் தொடங்கி கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

மாரத்தான் போட்டி

எட்டு கிலோமீட்டர் தூரத் திற்கான மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டியில் தொடங்கி கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் முடிவுற்றது. இதில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவு ஆண்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரிவில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது, இது கல்லூரியின் முகப்பில் ஆரம்பித்து கல்லூரி மைதானத்தில் நிறைவு பெற்றது.
பரிசளிப்பு விழாவில், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் பாலச்சாமி, சென்னை சுங்கத்துறை உதவி ஆணையர் டாக்டர் நட ராஜன்,, தடகளப் போட்டி வீரர் பிரவீன் சித்திரவேல், திரைப்பட நடிகர் ரியோ ராஜ், திரைப்பட நடிகை பாவியா ஆகியோர் பேசினர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என மொத்தம் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா கூறும்போது: ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த இப்போட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓரிரு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்தது.

அதன் பின் இப்போது, மனநலம் பேணுதல், மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கருத்துக்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img