fbpx
Homeபிற செய்திகள்தொழில் நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு ‘விஐ செக்யூர்’

தொழில் நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு ‘விஐ செக்யூர்’

தொழில் நிறுவனங் களுக்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ள ஒரு முழுமையான சைபர் பாதுகாப்பு தயாரிப்பாக Vi Secure-ஐ அறிமுகப்படுத்துகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஒரு டிஜிட்டல் யுகத்தில், பணிகள் அனைத்தும் க்ளவ்ட் தொழில்நுட்பத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில், தொழில்துறை 4.0 தானியக்கத்தைப் புரட்சிகரமானதாக ஆக்கிக்கொண்டிருக்கும் சூழலில் சைபர் அத்துமீறல்கள், தாக்குதல் களால் பாதிக்கப்படக் கூடியதாகவே வர்த்தகங்கள் உள்ளன.

நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும், வர்த்தகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை முன்கூட்டியே காப்பதற் குமான ஒரு விரிவான பாதுகாப்புத் தீர்வுத் தொகுப்பு தேவையாக உள்ளது.

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் தொழில் நிறுவனங்களுக்கான பிரிவான Vi Business, தற்போது Vi Secure அறிமுகம் குறித்த அறி விப்பை வெளியிட்டுள்ளது.

நெட்வொர்க், க்ளவுட் மற்றும் எண்ட் பாயிண்ட் எனப்படும் விநியோகிக்கப்பட்ட ஏபிஐ நிர்வாக அமைப்பில் எழும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாது காப்பைத் தரவல்ல நம்பகமான தீர்வுகளைக் கொண்ட விரிவான சைபர் பாதுகாப்பு பிரிவாக இது அமையும்.

விஐ நிறுவனத்தின் எண்டர்ப்ரைஸ் பிஸினெஸ் பிரிவின் சீஃப் அரவிந்த் நெவாடியா கூறியதாவது: டிஜிட்டல் யுகத்தில் எந்தவொரு வர்த்தகத்திலும் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பைப் பராமரிப்பது சவால் நிறைந்தது.

Vi நிறுவனத்தின் நெட் வொர்க் பாதுகாப்பு

Vi நிறுவனத்தின் நெட் வொர்க் பாதுகாப்பு நிபுணத்துவத்தை அதிக பட்சமாகப் பயன்படுத் தும் எங்களது தீர்வுகள் முன்னணி பாதுகாப்பு தீர்வு நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டவை என்றார்.

ஃபர்ஸ்ட்வேவ் க்ளவுட் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் டேனி மஹெர் கூறுகையில், மிகப்பெரிய அளவில் உலகத்தரமான சைபர் பாதுகாப்புத் தீர்வுகளை வழங்கும் வகையில் சைபர்சிசன் ஜிவி தளத்தைக் கட்டமைத்திருக்கிறோம்.

ஃபர்ஸ்ட்வேவின் சைபர்சிசன் ஜிவி தள இயக்கத்துடன் இந்தியாவில் சைபர் பாதுகாப்பைப் புரட்சி கரமானதாக்குவதற்கான வாய்ப்பை Vi Business-பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

டிரெண்ட் மேக்ரோவின் இந்தியா மற்றும் சார்க் கண்ட்ரி மேலாளர் விஜேந்திர கதியார் கூறுகையில், சைபர் குற்றவாளிகள் இந்தியா விலுள்ள நிறுவனங்களை முக்கிய இலக்காக கொண்டுள்ளதைத் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

இந்த சூழலில் Vi Business-ன் வாடிக்கையாளர் நிறுவனங்களில் பிசி, மேக், ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் சாதனங்களுக்காக எங்களது முன்னணி பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் நோக்கில் கூட்டுச் செயல்பாட்டை மேற்கொள்வதில் மகிழ்ச்சி என்றார்.

படிக்க வேண்டும்

spot_img