கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருவதை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அருகில் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கோவை மண்டலம்) இளஞ்செழியன் ஆகியோர் உள்ளனர்.



