விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாரத்தில் விதைப்பண்ணைகளில் மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத் தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 797 ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சாத்தூர் வட்டாரம் போத்திரெட்டியபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 11 விதைப்பண்ணையை, சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி ஆய்வு செய்தார்.
விதை உயிருள்ள இடுபொருள்
விதைப்பண்ணையில் விதை ஆதாரம் சரிபார்த்தல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, கலவன் பயிர்களை நீக்கல் மற்றும் விதைச் சான்று நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் அவர் கூறுகையில், விதை உயிருள்ள இடுபொருள்.
நல்ல விளைச்சலுக்கும், விவசாயிகளின் வருமா னத்தைப் பெருக்கவும் அடிப்படை தரமான நல்விதையே ஆகும். தர மான விதை இல்லை யென்றால் ஏனைய இடு பொருள்களை சரியான அளவில் இட்டாலும் மகசூல் பாதிக்கப்படும் என்றார்.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதைச்சான்று நடை முறைகளின்படி விதைப் பண்ணைகளை ஆய்வு செய்யுமாறு விதைச்சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் முருகேசன், விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ், சாத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திர சேகர், விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் மற்றும் சாத்தூர் வட்டார உதவி விதை அலுவலர் கலந்து கொண்டனர்.