fbpx
Homeபிற செய்திகள்இருதய நோய் பிரச்சினை ஏற்படுவது ஏன்? கேஎம்சிஹெச்-ல் கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு

இருதய நோய் பிரச்சினை ஏற்படுவது ஏன்? கேஎம்சிஹெச்-ல் கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு

இருதயம் சீரான இயக்கம் தொடர்பான ஹார்ட் ரிதம் கருத்தரங்கம், கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கடந்த 26, 27-ம் தேதிகளில் நடைபெற்றது.

இருதய மின் இயற்பியல் (எலக்ட் ரோபிசியாலஜி) என்பது இருதய நோய் துறையில் ஒரு தனிப்பிரிவாகும். செல்களால் தூண்டப்படும் ஒருவித மின்னோட்ட சக்தியினால் இருதயம் இயங்குகிறது. இந்த எலக்ட்ரிக்கல் சிஸ்டம் ஒழுங்கற்று இருக்கும்போது இருதய நோய் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இருதயம் துடிப்பது என்பது வழக்கத்தை விட மெதுவாக நடைபெறலாம் அல்லது வேகமாக துடிக்கலாம். சீரற்ற இருதய மேல் அரை துடிப்பு (Atrial fibrillation ) என்பதும் இவ்வகை இருதய பிரச்சனையில் ஒன்று.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய துடிப்பைக் கண்காணித்து சீராக்கும் கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவு செயல்படு கிறது. இங்கு எம்ஆர்ஐ-க்கு ஏற்ற பேஸ்மேக்கர்கள், மின்காந்தஅலை கண்காணிப்பு கருவி, முப்பாரிமாண மேப்பிங் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ சாதனங்கள் உள்ளன. மிகுந்த சிக்கலான நோய்களுக்கும் உலகத்தரமான சிகிச்சை வசதிகள் உள்ளன.

சீரற்ற இருதய மேல் அரை துடிப்பு சீராக்குவதற்கென்றே கேஎம்சிஹெச் மருத்துவமனை, க்ரையோஅப்லேஷன் (Cryo Ablation ) என்ற அதிநவீன மருத்து வமுறைய அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வித சிகிச்சைக்காக ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது, க்ரையோஅப்லேஷன் என்பது மிகவும் சிக்கலான சீரற்ற இருதய துடிப்பு நோய்க்கு சிறந்த முறையில் பாதுகாப்பான சிகிச்சை அளித்திடும் மருத்துவமுறையாகும். உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல இலட்சக்கணக்கான நோயா ளிகள் இந்த சிகிச்சை மூலம் பலன் பெற்றுள் ளனர்.

இந்த அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் தற்போது கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக நோயாளிகளுக்கு பயன் படும் வகையில் செயல்படுகிறது.

கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட் ரோபிசியாலஜி பிரிவு

கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட் ரோபிசியாலஜி பிரிவு சார்பில் கோவை இருதய ரிதம் கருத்தரங்கு ஏற்பாட்டு செய லாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ், கூறு கையில், அமொரிக்கா நாட்டில் இருந்து புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் டாக்டர் மனிந்தர் சிங் பேடி கலந்துகொண்டார். தேசிய அளவில் 50-க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர் என்றார்.

மாநாட்டையும் கருத்தரங்கையும் துவக்கிவைத்து கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசும்போது, மனிதகுலம் தற்போது வாழ்க்கை முறையினால் ஏற்படக்கூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நோயாளிக்கு அதிநவீன மருத்துவம் மூலம் உரிய சிகிச்சை வசதிகள் கிடைத்திட கேஎம்சிஹெச் முழுமுயற்சிகள் எடுத்து வருகிறது.

மருத்துவமனையில் செயல்பட்டு வரும் எலக்ட்ரோபிசியாலஜி துறை உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளித்து நோயாளிகள் இருதய நலன் காப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img