Homeபிற செய்திகள்கோவை சுங்கத்தில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சுங்கத்தில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சுங்கத்தில் இருந்து உக்கடம் வரை செல்லும் புறவழிச்சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளால் மேற்கொள்ளப்படும் அணுகு சாலை அமைத்தல் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாலத்தை ஒட்டி விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அமைக்கப்படவுள்ள அணுகு சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாநகராட்சி மூலம் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்த மதிப்பீடுகள் தயாரிக்கவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை சுந்தரமூர்த்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள் முரளிகுமார், ஆறுமுகம், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img