வருகிற பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியை மீண்டும் கைப்பற்ற தொண்டர்கள் தீவிரமாக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் பேசினார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பைசுஅள்ளி சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் கே. மனோகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், தலைமை செயற் குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர்.மனோகரன், சென்னகிருஷ்ணன், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. அன்பழகன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ.மணி தீர்மானங்களை வாசித்தார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கட்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழக வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
கூட்டத்தில் தமிழக வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியதாவது:-
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய, நகர செய லாளர்கள் ஒவ்வொரு கிளையாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். குறிப்பாக உணர்ச்சிமிக்க தொண்டர் களை மதிக்க வேண்டும்.
அப்படி மதித்தால் தான் கட்சி வளரும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நகர்ப் புற பகுதிகளை நாம் கைப்பற்றி விட்டோம்.
கிராமப்புறங்களில் கட்சியை பலப்படுத்த கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். சரியாக பணியாற்றாத ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியை மீண்டும் கைப்பற்ற தொண்டர்கள் தீவிரமாக பாடுபட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது கட மையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
பூத் கமிட்டிக்கு உணர்ச்சிமிக்க தொண்டர்களை ஒன்றிய, நகர நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இந்த திட்டங்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும். எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்குநான் உறுதுணையாக இருப் பேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், வேடம்மாள், மாநில நிர்வாகிகள் கீரை விசுவநாதன், ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் பி.கே. முரளி, வெங்கடேசன், வடமலை முருகன், இந்திராணி, தனபால், செங்கல் மாரி, சாந்தி புஷ்பராஜ், மணி, ஒன்றிய செயலாளர்கள் கோபால், கிருஷ்ணன், அன்பழகன், முனியப்பன், சௌந்தரராசு, சந்திரமோகன், நெப் போலியன், சிவப்பிரகாசம், செங்கண்ணன், ரத்தின வேல், முத்துக்குமார், சரவணன், மாது, சேட்டு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி. சக்திவேல் நன்றி கூறினார்.



