மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந் தியின் பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் புளியகுளம் பெரியார் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட பஞ்சாயத் துராஜ் தலைவர் எம்.எஸ்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சர்க்கிள் தலைவர்கள் கணேசன், ஜனார்த்தனன், பொது செயலாளர் செரி லூயிஸ், ஐ.என்.டி.யு.சி.செல்வராஜ், சிவாஜி ராஜன் ரங்கசாமி, பிரிக்கால் மனோகரன், சேவாதள செந்தில், சிங்கை செல்வராஜ்.வெங்கடாசலம், மதியழகன் உள்ள பலர் கலந்துகொண்டனர்.