கோவை வ.உ.சி பூங்காவில் 16 அடி உயர வ.உ.சிதம்பரனார் சிலை அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
அமைச்சர் சாமிநாதனுடன் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா மற்றும் உயர் அதிகாரிகள இருந்தனர்.
கோவை வ.உ.சி பூங்காவில் 16 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்கப்படுகிறது. சிலை அமைக்கும் இடத்தை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் சாமிநாதன் பேட்டியளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:
வ.உ.சி சிலை கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் சட்ட மன்றத்தில் அறிவித்தை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சிலை அமைக்கப்படும். கோவை மாநகராட் சியிலும் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர்
கோவைக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக் கப்பட இருக்கின்றது. வ.உ.சி வீட்டில் ஒளி, ஒலி காட்சி அமைக்கப்பட்டுள் ளது.
உச்சநீதிமன்றம் சிலைகளை சாலைகளில் இருந்து பூங்காக்களுக்கு மாற்ற அறிவுறுத்தி இருக்கின்றது. இனிமேல் வைக்கப்படும் சிலைகளை மட்டும் பூங்காவில் வைக்க நீதிமன்றத்தில் முறையிட இருக்கின்றோம். 3 மாத காலத்தில் கோவையில் வ.உ.சி சிலை அமைக்கப்படும்.



