fbpx
Homeபிற செய்திகள்சுதந்திர தின அமுதப்பெருவிழா: கே.பி.ஆர். கல்லூரி நடத்திய பைக் பேரணி

சுதந்திர தின அமுதப்பெருவிழா: கே.பி.ஆர். கல்லூரி நடத்திய பைக் பேரணி

75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை கொண் டாடும் வகையில் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி கோவை, மற்றும் தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) 4 (TN) ஙிழி இன்க்ரெடிபிள் இந்தியா சார்பில் கணியூர் டோல் பிளா சாவிலிருந்து பைக் பேரணி நே ற்று நடைபெற்றது. கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையம், டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் பங்கேற்று பைக் பேரணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கேபிஆர் மகளிர் மேம்பாட்டுக் கல்விப் பிரிவு முதல்வர் பி.சரவணபாண்டி, KPRCAS PRO அருண்பிரகாஷ் மற்றும் KPRCAS AO கிளி துளசி அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் என்சிசி அலுவலர், வங்கி மற்றும் காப்பீடு துறைத்தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் சி.பாலகிருஷ்ணன், ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் என்.ரவிகுமார், ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் 75 பைக்குகள் பங்கேற்றன.

படிக்க வேண்டும்

spot_img