fbpx
Homeபிற செய்திகள்புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை புலியகுளம் புனித அந் தோணியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழக கல்விதுறையின் அறிவுறுத்தல்படி இன்று போதைபொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் புலியகுளம் டி1 காவல் நிலைய ஆய்வாளர்(கிரைம்) பிரபாதேவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைபொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தலைமையாசிரியை உட்பட அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டார்கள். பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் திரு.ஆல்பர்ட் அலெக்சாண்டர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img