தூத்துக்குடி எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட எச்.எம்.எஸ். ஒருங்கிணைந்த அலுவலகத்தில் நடை பெற்றது.
எச்.எம்.எஸ் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார், எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ஆகியோரது ஏற்பாட்டில் தூத்துக்குடி மணிநகர் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள எச்.எம்.எஸ். ஒருங்கிணைந்த அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எச்.எம்.எஸ் மாவட்ட பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எச்.எம்.எஸ் அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர் ஆலோசணையில், எச்.எம்.எஸ் மாவட்ட கவுன்சில் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 25ல் எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி அபிராமி மஹாலில் மிகப் பெரிய அளவில் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் ஒருங்கிணைந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்லா யிரக் கணக்கில் கலந்து கொள்ள இருக் கின்றார்கள். இம் மாநாட்டில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் எச்.எம்.எஸ் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம் மாவட்ட பொருளாளர் காந்தி சேகர், உழைப்பாளர் சங்க கௌரவத் தலைவர் ஓம் சக்தி சங்கர் ஜி, ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர், சங்க இணைச் செயலாளர் சுப்பையா கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



