fbpx
Homeபிற செய்திகள்காவிரி நீரால் தர்மபுரி மாவட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு

காவிரி நீரால் தர்மபுரி மாவட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு மாவட்ட மான குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து
அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரி நீராக வரும் நீர் அனைத்தும் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்று வீணாக கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் ஒகேனக்கல்
காவிரி ஆற்றின் நீரை மின் மோட்டார் அமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்பி விவசாயிகளின் நலன் காக்க விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க வழிவகை செய்ய வேண்டும்.

வறட்சி மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றிட ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி யின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

இந்நிகழ்ச்சி யில் மாவட்ட பொது செய லாளர் ஐஸ்வர்யா முருகன், வெங்கட்ராஜ். மாவட்டத் துணைத் தலை வர் சோபன், நகர தலைவர் ஜிம் சக்தி, இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் புவனேஷ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் மவுனகுரு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img