fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடிசியாவில் எலக்ட்ரோடெக் 2022 கண்காட்சி

கோவை கொடிசியாவில் எலக்ட்ரோடெக் 2022 கண்காட்சி

கோவை கொடி சியாவில் எலக்ட்ரோடெக் &-2022 கண்காட்சி வருகிற 12-ம் தேதி தொடங்கி 15-ம்தேதி முடிய 4 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து கொடிசியா தலைவர் வி.திருஞானம், எலக்ட்ரோ 2022 வைஸ் சேர்மன் பி.பொன்ராம், கொடிசியா இணை செயலாளர் சசிகுமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப் போது அவர்கள் கூறிய தாவது:- கோவை கொடிசியா இன்டெக் டெக்னாலஜி சென்டர் சார்பில் “எலக்ட் ரோடெக்“ 2022 6வது கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கிறது.

இந்த கண் காட்சி வருகிற 12-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி முடிய 4 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை இந்திய கப்பற்படை உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சுய சார்பு மையம் தலைவர் பி.பாலசுந்தரம், க்ளாஸ்டர் கேபில்ஸ் லிட் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் மோடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கிறார்கள். இந்த கண்காட்சியில் 210 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

7500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ள இந் த கண்காட்சியில் மகாரா ஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, உ.பி. தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா. உள்பட பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின் றன. இதன்மூலம் ரூ 800 கோ டிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

25 ஆயிரம் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறோம். இந்த கண்காட்சி வர்த் தக பார்வையாளர்கள் கா லை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பொதுமக்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் அனுமதிக்கப் படுவார்கள் பொதுமக்கள் மாணவர்களுக்கும் நுழைவு கட்டணம் ரூ 50 உண்டு. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img