நைட் ஃபிராங்க் இந்தியா தனது சமீபத்திய “இந்தியா ரியல் எஸ்டேட்: பி1 2022” (ஜனவரி – ஜூன் 2022) என்ற அறிக்கையில், பி1 2022 கால விற்பனையில், சென்னை குடியிருப்புச் சந்தையானது 21% இயர் ஆன் இயர் (YoY) வளர்ச்சியைப் பதிவு செய் ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநகரம் பி1 2022ல் 6,951 அலகு வீடுகள் என்றளவில் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது ஒப்பீட்டளவில், பி1 2021-ல் 5,751 அலகு வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
பி1 2021-ல் 5,424 வீட்டு அலகுகள் என்ற எண்ணிக்கையிலிருந்த புதிய வீட்டுக்கான தொடக்கங்கள், பி1 2022-ல் 7,570 அலகு வீடுகள் என்றளவில் உயர்ந்து 40% (YoY) வளர்ச்சியடைந்துள்ளது.
சென்னையில் குடியி ருப்பு சொத்துக்களின் வெயிட்டடு ஆவரேஜ் விலையானது மதிப்பிடப் பட்ட 5% (YoY) என்ற ளவில் உயர்ந்து ஒரு சதுரடிக்கு ரூ.4,242-ஆக அதிகரித்துள்ளது.
பி1 2022-ல், அலுவலகப் பணியிடத் தேவைகள் 80% (YoY) என் றளவில் அதிகரித்து 2.2 மில்லியன் சதுரடியாக பதிவாகியுள்ளன.
பி1 2022 காலகட்டத் தில் பதிவான மொத்த விற்பனையில் 58% விற்பனையுடன் தென் சென்னை ஆதிக்கம் செலுத்தியது.
தமிழ்நாடு மற்றும் கேரளா நைட் ஃபிராங்க் இந் தியாவின் மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாஸ் அனிகிபட்டி கூறியதாவது: சென்னை குடியிருப்புச் சந்தையானது, விலை மற்றும் தேவை ஆகியவற்றுக்கிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தும் செயலாக உள்ளது.
விலை யால் பாதிக்கக்கூடிய சந்தையாக இருந்தாலும், பரந்த அளவிலான நிலை யான மதிப்புகளுடன், கடந்த 24 மாதங்களில் விற்பனை அளவுகள் பராமரிக்கப்பட்டன.
இருப்பினும், பெருந்தொற்றின் தொடக்கத்திற்குப் பிறகு விலையில் உண் டான குறிப்பிடத்தக்க சரிவானது, குடியிருப்பு சந்தைகளின் விற்பனையின் வளர்ச்சியைத் தூண்டியது.
சந்தைகள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போது, வலுவான தேவை மற்றும் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் ஆகியவற்றின் ஒருங் கிணைந்த விளைவாக ஒரு விலையேற்றத்தைக் காண்கிறோம்.
2022-ம் ஆண்டின் முற்பகுதியில் பெருந்தொற் றின் மூன்றாம் அலையின் தாக்கம் இருந்தபோதிலும், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் சென்னையின் வணிகச் சந்தை வலுவாக இருந்தது.
இதன் விளைவாக பரிவர்த்தனை நடவடிக்கைகள் அதிகரித் தன.இம் மாநகரமானது, அதன் உள்ளார்ந்தசெலவின் அனுகூலம் மற்றும் உயர் தரமான அலுவலக இடம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பார்க்கையில், அலுவலகச் சந்தையில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.



