fbpx
Homeபிற செய்திகள்‘வோல்வோ வெர்ஸ்’ கார் அறிமுகம் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.55,90,000

‘வோல்வோ வெர்ஸ்’ கார் அறிமுகம் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.55,90,000

நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ப்யூர் எலெக்ட்ரிக்எக்ஸ்சி40 ரீசார்ஜ் ஆன் மெடாவெர்ஸ் ‘வோல்வோ வெர்ஸ்’ காரை வோல்வோ கார் இந் தியா அறிமுகப்படுத்தியது.

வோல்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்தியாவிலேயே உள்ளூரில் முதன் முதலில் அஸெம்பிள் செய்யப்பட்ட ஆடம்பரமான எலெக்ட் ரிக் வாகனமாகும்.

இது குறித்து வோல்வோ கார் இந்தியா மேலாண் இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில் ‘இந்தியாவுக்கும், இந்திய நுகர்வோர்க்குமான வோல்வோ காரின் நீண்ட கால தொலை நோக்குச் சிந்தனையையும், உறுதிப்பாட் டையும், எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் பெங்களூரு தொழிற்சாலை அசெம் பிளி அலகு அறிமுகம் மூலம் நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.

உயரிய ஹால்மார்க் தரம், சிறந்த பாதுகாப்புடன் வோல்வோ இவி வேண்டுமென விரும்பிய வாடிக்கையாளர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஒற்றை எக்ஸ்சி40 ரீசார்ஜ் மூலம் 400+ கிமீ பயணம் கூடுதல் கவர்ச்சியான அம்சமாகும். நேரடி ஆன்லைன் விற்பனை வாடிக்கையாளர்களுடனான எங்களது நேரடி உறவை உறுதிப்படுத்துகிறது.

இதன் மூலம் ஹாசில்-ஃப்ரீ வாங்கும் அனுபவத்தையும் வழங்குகிறது’ என்றார். இந்தியாவில் எக்ஸ்சி40 ரீசார் ஜுக்கு ஹாசில்-ஃப்ரீ ஓனர்ஷிப் பேக்கேஜ் அறிமுகம் குறித்த அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டது.

ஹாசில்-ஃப்ரீ ஓனர்ஷிப் பேக்கேஜ்: எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ 55,90,000 + வரி. 3 வருட விரிவான கார் வாரண்டி. 3 வருட வோல்வோ சர்வீஸ் பேக்கேஜ். 3 வருட சாலையோர உதவி. 8 வருட மின் கல வார ண்டி. 4 வருட டிஜிடல் சேவைகளுக்கான சந்தா.

மூன்றாம் நபர் மூலம் 1 வால் பாக்ஸ் சார்ஜர் (11 கிலோவாட்). வோல்வோ கார் இந்தியா வலைதளம் மூலம் நேரடி ஆணைகள் எக்ஸ்சி40 ரீசார்ஜ் நேரடி யாக ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று வோல்வோ கார் இந்தியா அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் வோல்வோ கார் இந்தியா வலைதளத்தில், தங்களுக்கான ஆணைகளைப் பதிவு செய்தும், பணத்தைச் செலுத்தவும் இயலும்.

திரும்பப் பெறத்தக்க வைப்புத் தொகையாக ரூ 50,000/- வோல்வோ கார் இந்தியா வலைதளத்தில் செலுத்தி தங்களுக்கான ஆணைகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img