கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மைதானத்தில், சுயசார்பு சாலையோர வியாபாரிகளின் கொண்டாட்டம் நிகழ்ச்சியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்து, சாலையோர வியா பாரிகளுக்கு காசோலை, விற்பனை சான்றிதழ், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மேயர் பேசியதாவது:
ஸ்வாநிதி திட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு என சாலையோர வியாபாரிகளை கண்டறிய 15450 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 11000 பயனாளிகளுக்கு ரூ.10,000/- வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதல் தவணை முடித்த 2500 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.20,000/- கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 2200 பயனாளிகள் கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதுபோல தமிழக முதல்வர் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். தொடர்ச்சியாக ஸ்வாநிதி திட்டத்தில் ஜூலை 15 முதல் 45 நாட்களுக்கு நமது மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இதில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் அனை வரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். உங்கள் வளர்ச்சியில் கோவை மாநகராட்சியும் தமிழக அரசும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசினார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ. ஷர்மிளா, மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிசெல்வன், பணிகள் குழுத்த லைவர் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, ஆளுங்கட்சித் தலை வர் கார்த்திகேயன், மாமன்ற உறுப் பினர்கள் அஸ்லாம்பாஷா, சுமா விஜயகுமார், வித்யா இராமநாதன், மத் திய அரசின் பார்வையாளர் நிஷ்தா கக்கர், நகர் நல அலுவலர் மரு.பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், உதவி நகர் நல அலுவலர் மரு.ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



