கோவை தொண்டா முத்து£ர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ். பார்த்திபன் தலைமையேற்று பேசியதாவது:
கூட்டுறவு சங்கம் மூலம் பலவகையான கடன்கள் வழங்குகின்றனர். உறுப்பினர்கள் அனைவரும் தகுந்த ஆவணங்களின் அடிப்படையின் கடன்கனை பெற்று பயனடைய வேண்டும்.
மேலும் அனைவரும் சங்கங்களின் சேமிப்பு தொகைகளை அதிகப்படுத்த வேண்டும். அரசாங்கம் அளிக்கும் அனைத்து சலுகைகளும் கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைக்கின்றன அவைகளை உறுப்பினர்கள் பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கடன் மேளாவில் சங்கத்தின் தலைவர் ªஐயபால், கள அலுவலர் முத்துக்குமார், செயலாளர் முனியப்பன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



