fbpx
Homeபிற செய்திகள்கள்ளத்தனமாக மது பாட்டில் விற்றவர் கைது

கள்ளத்தனமாக மது பாட்டில் விற்றவர் கைது

ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளைக் கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் பிளியூர்.

இந்த கிராமத்தில் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்கப் படுவதாக போலீச £ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பிளியூர் கிராமத்தில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன், தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் ரத்தினம் மகன் புஷ்பராஜ் தனது சில்லி சிக்கன் விற்பனை கடையில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து புஷ்பராஜை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் புஷ்பராஜிடம் இருந்து 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img