fbpx
Homeபிற செய்திகள்கோவையில் புக்சோர் நிறுவனத்தின் சலுகை விற்பனை: 22-ல் துவக்கம்

கோவையில் புக்சோர் நிறுவனத்தின் சலுகை விற்பனை: 22-ல் துவக்கம்

புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட சிறந்த மற்றும் பிரத்யேக புத்தகங்களின் விற்பனையில் முன்னணி ஆன்லைன் நிறுவனமாக புக்சோர் விளங்கி வருகிறது. இந்நிறுவனம் புதிய ‘லாக் தி பாக்ஸ் ரீலோடட்’ என்னும் நிகழ்ச்சியை கோவையில் நடத்துகிறது. இது ஒரு வகையான புத்தக விற்பனையாகும்.

இதில் எந்தவொரு தனியான புத்தகத்திற்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை.
அதற்கு பதிலாக, ஒரு பெட்டிக்கு பணம் செலுத்தி, அந்த பெட்டியில் எவ்வளவு புத்தகங்கள் கொள்ளுமோ அதற்கேற்ற புத்தகங் களை எடுத்துச் செல்லலாம்.

இந்த சலுகை விற்பனை கோவையில் வரும் 22-ம் தேதி முதல் 31 வரை ஆர்.எஸ்.புரம், ராஜஸ்தானி சங்கத்தில் நடை பெறுகிறது.

சலுகை விற்பனையில் ஒடிசியஸ் பெட்டி, பெர்சியஸ் பெட்டி மற்றும் மிகப்பெரிய மற்றும் வலிமையான ஹெர்குலஸ் பெட்டி என கிரேக்க புராணக் கதாநாயகர்களின் பெயர்களைக் கொண்ட மூன்று வெவ்வேறு அளவிலான பெட்டிகளில் இருந்து புத்தகப் பிரியர்கள் பெட்டியை தேர்வு செய்யலாம்.

ஒடிசியஸ் பெட்டியின் விலை 1199 ரூபாயும், பெர்சியஸ் பெட்டி விலை 1799 ரூபாயும், ஹெர்குலஸ் பெட்டியின் விலை 2999 ரூபாய் ஆகும். பெட்டிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வோர், முழுவதுமாக நிறையும் வகையில் விரும்பும் புத்த கங்களை தேர்வு செய்து எடுத்துச் செல்லலாம்.

புக்சோர் நிறுவனர் வித்யுத் சர்மா கூறுகையில், கோவையில் ‘லாக் தி பாக்ஸ் ரீலோடட்’ நிகழ்ச்சியை நடத்துவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

இங்கு புத்தகங்கள் விற்பனையாக நிகழ்ச்சி நடைபெறும் 10 நாளும் புத்தகங்களை கொண்டு வந்து நிரப்புவோம் என்றார்.

இளைஞர்களிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக குறைந்த விலையில் ஏராளமானபுத்தகங் களை புக்சோர்.காம் விற்கிறது. வாசித்து முடித்த புத்தகங்களை இந்நிகழ்ச்சி யின் மூலம் விற்பனை செய்யலாம்.

அவர்கள் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ல் புக்சோரின் “டம்ப்” செயலியைப் பதிவிறக்கம் செய்து, அவர்கள் விற்க விரும்பும் புத்தகங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவேற்றம் செய் யலாம்.

படிக்க வேண்டும்

spot_img