fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச தரத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் சாதனை புரியும்- வேளாளர் கல்வி அறக்கட்டளை

சர்வதேச தரத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் சாதனை புரியும்- வேளாளர் கல்வி அறக்கட்டளை

1969ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேளாளர் கல்வி அறக்கட்டளை, கிராமப்புற மற்றும் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்த இளம் பெண்களை மேம்படுத்தவும், கல்வியின் மூலம் அவர்களைத் தலைவர்களாக உயர்த்தவும், லட்சக்கணக்கான ஆர்வமுள்ள மனங்களுக்கு கல்வியின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது.

படிப்படியாக வளர்ந்து, நமது சமூகத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விழுமியங்களைப் புகுத்தி, வேளாளர் கல்வி அறக்கட்டளை குடும்பம் இப்போது 10 நிறுவனங்களைக் கொண்ட கல்விக்குழுமமாக உள்ளது, இதில் 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளி முதல் உயர்கல்வி வரை தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர். கலை அறிவியல், பொறியியல், மேலாண்மையியல், செவிலியரியல், மருந்தியல், கல்வியியல் என்று பல்வேறு புலங்களுக்கான கல்வி மையமும் ஆராய்ச்சி மையமும் ஏற்படுத்தப்பட்டு சாதனைக் கொடிகட்டி செயல்படும் வெற்றிகரமான சமூக அமைப்பாக இது விளங்குகிறது.

வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் திரு.எஸ்.டி .சந்திரசேகர் தலைமையில் கல்விச் சேவையில் சாதனைகள் புரியும் “வேளாளர் கல்வி நிறுவனங்கள்”

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கித் தேர்வுகள், அக்கவுன்டிங், ஆடிட்டிங் ஆகிய தேர்வுகளுக்கு முன்னணி கல்விநிறுவனங்களுடன் இணைந்து வகுப்புகள் நடைபெறுகின்றன.

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேளாளர் கல்வி அறக்கட்டளையால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும். இங்கு பாடத்திட்டம் மட்டும் அல்லாமல் அதனோடு தொடர்புடைய பிறவற்றையும், திறன் மேம்பாட்டு வகுப்புகள், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்பார் ப்புகளையும், சவால்களையும் பூர்த்திசெய்கிற அளவில் அறிவையும், ஆற்றலையும், திறமையையும் புகட்டுகிற வகையில் படிப்புகளும், பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இங்கு பயிலும் மாணவர்களின் உயர்நிலை புரிதிறனையும், கருத்தியல், செயல்முறை என்ற இருகோணத்திலும் வல்லன்மையும் ஏற்படுத்தும் வகையில் கற்பிக்கப்படுகின்றன.

பின்வரும் பலதரப்பட்ட தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமான முதன்மை அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) / இந்திய குடிமையியல் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வு வகுப்புகள் தேவ்ஸ் ஐஏஎஸ் அகாதெமியால் நடத்தப்படுகின்றன.

வங்கித் தேர்வுகள் தீரன் ஐஏஎஸ் அகாதெமியால் நடத்தப்படுகிறது.
(சிஏ / சிஎம்ஏ / சிஎஸ் தேர்வு வகுப்புகள் ஸ்ரீ ராகா சிஏ அகாதெமியால் நடத்தப்படுகின்றன. (பட்டயக் கணக்காளர் தேர்வு, மேலாண்மை கணக்காளர் தகுதித் தேர்வு) திரையரங்குக் கலை சான்றிதழ் கல்வி ஹெலன் ஓ’ பன்னாட்டு நாடகவியல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

கைவினை அழகுப் பொருள் உருவாக்கப் பயிற்சி வகுப்புகள் மீனாட்சி நுண்கலை மையத்தால் நடத்தப்படுகின்றன. தொழில் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் பகுப்பாய்வு சான்றிதழ் வகுப்புகள் ஐபிஎம் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன.

டேலி, எம்எஸ்ஆபீஸ் கணினிப் பயிற்சிகள் ஐசிடி அகாதெமியால் நடத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பு பயிற்சி முன்வகுப்புகள் மென்டோரா கல்வி நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன.

டேலி, எம்எஸ்ஆபீஸ் கணினிப் பயிற்சிகள் சி கியூப் டெக்னாலஜிஸ் அகாதெமியால் நடத்தப்படுகின்றன. (எஸ்எஸ்சி) பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வாணையம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான தேர்வு வகுப்புகள் (டைம்) ட்ரிம்பண்ட் மேலாண்மை கல்வி நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன.

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச முன்னணி கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களோடு மிக வலிமையான புரிந்துணர்வுடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து சிறப்புரைகள், வல்லுநர் உரையாடல், மாநாடுகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், தொழில்சார் கல்விப் பயணங்கள், கூடுகைகள், நூல்வெளியீடுகள், செயல் திட்டங்கள், தொழில்சார் செயல்முறை ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன.

பிரெஞ்சு, ஜெர்மனி, இந்தி மொழிகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் தகவல் தொடர்புத் திறன் மேம்படும் வகையில் உயர்நிலையில் செயல் முறைரீதியில் பயிற்றுவிக்க ப்படுகின்றன.

படிக்க வேண்டும்

spot_img