fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சுதந்திர போராட்ட மாவீரர் பொல்லான் 217வது நினைவு தின நிகழ்ச்சி

கோவையில் சுதந்திர போராட்ட மாவீரர் பொல்லான் 217வது நினைவு தின நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி 48வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுகாதார போராட்ட மாவீரர் பொல்லான் நினைவு தினம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் முருகேசன் மற்றும் செயலாளர் மதிப்புறு முனைவர் கௌதம் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வக்குமார் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக வேலூர் அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் மருத்துவர் கணேசன், சுகாதார மேற் பார்வையா ளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாவீரன் பொல்லான் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல இயக்கத் தலைவர் மருதாசலம் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய தமிழ்நாடு அரசு மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் கூறியதாவது:

மாவீரன் பொல்லான் கொங்கு மண்டல சுகாதார போராட்ட வீரர் தீரன் சின்னமலை படையின் படை தளபதியாக பணி யாற்றி இந்திய திருநாட்டின் சுதந்திரத் திற்காக தன் இன்னுயிரை நீர்த்தவர்.

அன்னாரது தியாகத்தை போற்றும் வகையில் கொங்கு மண்டல அருந்ததியர் சமூகத்தை சார்ந்த மாவீரன் பொல்லான் நினைவை போற்றுகின்ற வகையில் இந்த விழாவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் அனுஷ்டித்து செய்து வருகின்றனர்.

அருந்ததியர் இனம் வீரத்திற்கு சொந்தமான இனம் என்பதனை வரலாற்று பதிகளான ஒண்டிவீரன், பொல்லான் ஆகியோர் பற்றி படிக்கும் போது தெரியவருகிறது.

நாம் இங்கு தூய்மை பணியை மேற்கொள்கிறோம் என்பது கால சூழ்நிலை, பொருளா தார சூழ்நிலை யை தவிர இது நமது குலத்தொழில் கிடையாது என்பதனை அருந்ததியர் சமூகத்தை சார்ந்த ஒவ்வொரு தூய்மை பணியாளர்களும் உணர வேண்டும்.

இந்த நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவீரன் பொல்லான் நினைவை போற்றும் வகையில் 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததுடன் மாவீரன் பொல்லான் நினைவு தினத்தை அரசு விழாவாக உத்தரவு பிறப்பித்துள்ளது

அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதி தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவை சிறப்பாக நடத்திய இச்சங்கத்தின் தலைவர் முருகேஷ், செயலாளர் முனைவர் கௌதம், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆனந்தன், ரவிக்குமார், அசோகன், பாலா, பிரதாப், நவீன், மந்திரி ஆகியோருக்கும் சிறப்பு விருந்தினராக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் கணேசன், சிறப்புரையாற்றிய மருதா சலம் ஆகியோருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக செல்வகுமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img