fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி: பதக்கங்கள் குவித்த ஜெயம் அகாடமி வீரர்கள்

தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி: பதக்கங்கள் குவித்த ஜெயம் அகாடமி வீரர்கள்

தேசிய அளவிலான உள்ளரங்க வில்வித்தை போட்டி ஈரோடு வேளாளர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முதல்முறையாக நடைபெற்றது.

ஜெயம் வில்வித்தை அகாடமி சார்பில் நடந்த இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வில்வித்தை வீரர்கள், வீராங் கனைகள் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவிற்கு ஜெயம் வில்வித்தை அகாடமியின் நிறு வனர் தி.மணிகண்டன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி டாக்டர் சித்தார்த்தன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், கொ.ம.தே.க இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி. மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ் குமார், தமிழ் நாடு கால்பந்து சங்க பொதுச்செயலாளர் விஷ்ணு விகாஸ், ஸ்லம்டாக் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்
பாளர் ஜெயக்குமார், ஸ்ரீதேவி, செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் ஜெயம் வில்வித்தை அகாடமி வீரர்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்று வெற்றி வாகை சூடினார்கள். இவர்களுக்கு உடற்கல்வி இயக்குனரும் ஒருங்கிணைப்பாளருமான ப.தேவகாந்தன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img