டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பி-எஸ்யூவி பிரிவில் தனது புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் என்னும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது இந்நிறுவனத்தின் முதல் செல்ப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் அதிநவீன வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், கம்பீரமான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக சிறப்பானதொரு இடத்தை பெற்றிருக்கிறது.
இதில் உள்ள 2டபிள்யூடி என்னும் தொழில்நுட்பம் என்ஜினில் இருந்து ஒரே நேரத்தில் ஆற்றல் மற்றும் முறுக்கு விசையை வழங்குகிறது. இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுகிறது.
புதுடெல்லியில் புதிய காரை அறிமுகம் செய்து, டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறியதாவது:
‘கார்பன் நடுநிலை சமூகத்தை’ உருவாக்கு வதற்கான தொலைநோக்கு பார்வையுடன், தூய்மை யான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக் குவதற்கான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.
இந்த இலக்குகளுக்கு ஏற்ப, அர்பன் க்ரூசர் ஹைரைடரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘முற்றிலும் மின்மயமாக்கல்’ போன்ற முயற்சிகளுக்கு போதிய ஊக்கத்தை அளித்து, அதன் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்திற்கும் உத்வேகத்தை அளிக்கும் என்றார்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மசகாசு யோஷிமுரா கூறியாதவது:
அர்பன் க்ரூசர் ஹைரைடர் வலிமையான செல்ப்- சார்ஜிங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் பவர்டிரெய்னை வழங்குகிறது.
முதன் முறையாக, இந்த மாடல் கார் கர்நாடகாவில் உள்ள டொயோடா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றார்.
நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ததாஷி அசாசுமா கூறுகையில், இது சிறந்த எரிபொருள் திறன், விரைவான முறுக்கு விசை மற்றும் மென்மையான இயக்கம் போன்றவற்றில் சிறந்த முன்மாதிரியான செயல்திறனை வழங்கும்.
இதன் கம்பீரமான தோற்றம் மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவை உலகளாவிய எஸ்யூவி கார்களின் வரிசையில் இதற்கென தனி இடத்தை பிடிக்கும் என்றார்.
இந்த காருக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. ரூ.25 ஆயிரம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள்www.toyotabharat.com/online-booking/ என்ற இணையதளத்தில் அல்லது அருகில் உள்ள டொயோடா டீலர்களிடம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.



