கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் டாக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தார்.
பூமாண்டஅள்ளி ஊராட்சியில் மேக்கனாம்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25.23 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டும் பணி, மேக்கனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுச் சுவர் கட்டும் பணி மற்றும் பைசுஅள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அண்ணாநகர் ராணி வீடு முதல் கனகவேல் வீடு வரை ரூ.5.84 லட்சம் மதிப்பீட்டில் 125மீ பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி, உதவி பொறியாளர்கள் முருகன், ஸ்ரீதர், கோவிந்தராஜ் பணி மேற்பார்வையா ளர்கள் விஜயா, தமிழ்செல்வி, லட்சுமி, சாலை ஆய்வாளர்கள் ரவி, சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன், கவிதா நாகராஜன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் குணசேகரன், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



