திருவொற்றியூர் குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக மக்களை அப்புறப்படுத்திய திமுக பகுதி கழக செயலாளருக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதனால், D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், திருவொற் றியூர் குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக, தக்க தருணத்தில் எச்சரிக்கை செய்து அனைவரையும் வெளியேற்றி, உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த திமுக பகுதி கழக செயலாளர் தனியரசை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.



