fbpx
Homeபிற செய்திகள்தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் அணியில் கோவை மாணவி

தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் அணியில் கோவை மாணவி

கோவையில் இந்துஸ் தான் இன்ஜினீயரிங் கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான வரு டாந்திர பயிற்சி முகாமில், தேசிய ஜூனியர் துப்பாக்கிச் சுடும் அணிக்கு தேர்வான கோவை மாணவி கௌரவிக்கப்பட்டார்.

முகாமில் பி மற்றும் சி சான்றிதழ் தேர்விற்குத் தேவையான பயிற்சிகளைப் பெற சுமார் 464 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமின் நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக் கங்களும் வழங்கப்பட்டன.

2 தமிழ்நாடு விமானப் படைப் பிரிவு மாணவி பிரியதர்ஷினி, தேசிய அளவில் நடைபெற்ற 64-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். சிறப்பான திறமையால், இவர் தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடுதல் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

இவருக்கு தன்னார் வலர்கள் வழங்கிய ரூ.14 ஆயிரத்துக்கான காசோலையை, கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வழங்கி கௌரவித்தார். இந்துஸ்தான் இன்ஜீனியரிங் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயா, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

15 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில், கர்னல் எல்எல்எஸ் நாயுடு, மாணவிக்கு ரூ.10 ஆயிரத் துக்கான காசோ லையை வழங்கினார். சாதாரண குடும்பத் தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, பள்ளிப் பருவம் முதலே என்.சி.சி. யில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.

அவினாசிலிங்கம் பல்க லைக்கழகத்தில் படிக் கும்போதே விமானப் படை என்.சி.சி. பிரிவில் சேர்ந்து தனது பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதன் காரணமாக இவர் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் இரு முறை பங்கேற்றுள்ளார். தேசிய அளவில் சிறந்த மாணவிக்கான பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

“எனது வாழ்வில் குறிக்கோளை அடைய என்.சி.சி. அமைப்பு ஒரு பாலமாக இருக்கிறது. தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தயாராகி வருகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார் பிரியதர்ஷினி.

தேசிய அணிக்கு தேர்வாகி வெற்றி பெற மாணவிக்கு விமானப் படை விங்க் கமாண்டர் நிதின் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர்.

கல்லூரி டீன் மகுடேஸ்வரன், என்.சி.சி. அலுவலர்கள் லெப்டினன்ட் ரவிக்குமார், பிளையிங் ஆபீசர் ஜெய்னுலாப்தின், ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img