fbpx
Homeபிற செய்திகள்பனப்பள்ளி ஆதிவாசி கிராமத்தில் 98 கழிப்பிடங்கள் கட்ட அடிக்கல் சர்வதேச ரோட்டரி சங்கம் ரூ.30 லட்சம்...

பனப்பள்ளி ஆதிவாசி கிராமத்தில் 98 கழிப்பிடங்கள் கட்ட அடிக்கல் சர்வதேச ரோட்டரி சங்கம் ரூ.30 லட்சம் நிதி உதவி

கோவை ரோட்டரி சங்கம் சார் பில் சின்னத்தடாகத்தை அடுத்துள்ள பனப்பள்ளி ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கான சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது.

ஆனைகட்டியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இதில் பனப்பள்ளி கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

பொதுப்போக்குவரத்து வசதியில்லாக இக்கிராமத்தில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட இயலாத வகையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள 92 வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை.

இதனைக் கருத்தில் கொண்டு கோவை ரோட்டரி சங்கம் பரிசுத்தம் என்ற திட்டத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டித் தர முன்வந்தது. இதற்கு சர்வதேச ரோட்டரி சங்கம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

தனிநபர் கழிப்பிடம் கட்ட அரசு தரும் நிதி ரூ.12 ஆயிரம் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் என தலா ரூ.42 ஆயிரம் செலவில் 98 கழிப்பிடம் கட்டித்தரப்பட உள்ளன.

இதற்காக நடந்த தொடக்க விழாவில், சங்கத் தலைவர் எஸ்.சுவாமிநாதன் வரவேற்றார்.

திட்டத்தின் தலைவர் எம்.மணி மூர்த்தி, சர்வதேச ரோட்டரி நிதி ஒருங்கிணைப்பாளர் டி.மணி, 24.வீர பாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் டி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.வி.சி.நடராஜன் திட்டத் தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினர்களான மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன், வழங்குரைஞர் என்.சுந்தரவடிவேலு ஆகியோர் திட்டத் தொடக்க கல்வெட்டினை திறந்து வைத்தனர்.

ரோட்டரி பவுண்டேசன் நிதிக்குழுத் தலைவர் பி.பத்மகுமார், கிராமப்புற மேம்பாட்டு திட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம், துணை ஆளுநர் கணேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

மாவட்ட ரோட்டரி பவுண் டேசன் கமிட்டித் தலைவர் ஆர்.ஜெயசங்கர், மாவட்ட ஆளுநர் ராஜசேகர் சீனிவாசன், பூமியைக் காப்போம் திட்டத்தின் தலைவர் எம்.என்.மனோகரன் ஆகியோர் அனைத்து ஆதிவாசிகளுக்கும் போர்வை மற்றும் தோட்டப்பயிர் விதைகளை இலவசமாக வழங்கினர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வம், ரோட்டரி சங்கப் பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img