fbpx
Homeபிற செய்திகள்தமிழக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

தமிழக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எந்த திட்டங்களையும் தமிழக அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டி உள்ளது.

தூத்துக்குடி பா.ஜ.க. ஓபிசி அணியின் மாநில பிரிவு விவேகம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி இன்று (நவ.30) மனித சங்கிலிப் போராட்டம் நடக்கிறது.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள எந்த திட்டங்களையும் சரியாக நடை முறைப்படுத்தவில்லை என்றார்.

தூத்துக்குடி பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பால்ராஜ் கூறியதாவது:
இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட கலெக்டர், திமுக மாவட்ட செயலாளர் போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பேசி இருப்பதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

பா.ஜ.க. அமைப்பு சாரா மாநில செயலாளர் தேவக்குமார், வடக்கு மாவட்ட ஓபிசி அணி தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img