fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இம்காப்ஸ் விற்பனை நிலையம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கோவையில் இம்காப்ஸ் விற்பனை நிலையம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கோவை இம்காப்ஸ் (Impcops) விற்பனை நிலையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்துசெய் நிலையம் மற்றும் பண்டகசாலை விற்பனை நிலையம்(Impcops நேரடி விற்பனை நிலையம்) 100அடி சாலை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்தது.

இது தற்போது காந்திபுரம், முதல் தெரு விரிவாக்கம், D.No..647-650க்கு மாற்றப்பட்டு பண்டக சாலை திறப்பு விழா நடைபெற்றது.
இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து விற்பனையையும் துவக்கி வைத்தார். இங்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துகள் விற்கப்படும்.
மேலும் ஆயில் மசாஜ் (oil massage ) மேற்கொள்ளப்படும்.

இதில் கோவை – திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், நீலகிரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், Impcops தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img