வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.2,000/- மதிப்பீட்டில் தாய்சேய் நலப் பெட்டகத்தினை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநிலங்களவை உறுப்பினர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), சோமசுந்தரம் உட்பட பலர் உள்ளனர்.



