fbpx
Homeபிற செய்திகள்பழைய கார்களின் விற்பனை அதிகரிப்பு

பழைய கார்களின் விற்பனை அதிகரிப்பு

பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை புதிய கார் சந்தையைவிட அதிகரித்து வரு வதாக ஓஎல்எக்ஸ் ஆட்டோஸ் தனது 5-வது பதிப்பான மோட்டார் வாகன ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பழைய கார்களுக்கான சந்தை குறித்த இந்த ஆய்வை கிரிசில் உடன் இணைந்து மேற்கொண்டது.ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

ஓஎல்எக்ஸ் ஆட்டோஸ் -கிரிசில் ஆட்டோ ஆய்வு 2021’-ன் படி பயன் படுத்தப்பட்ட கார்களின் சந்தை புதிய கார் சந்தையை விட அதிகரித்து வருகிறது. இந்தத் துறை 2022-ம் நிதி ஆண்டில் 15 சதவீத ஆரோக்கியமான வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் கூட்டு வரு டாந்திர வளர்ச்சி விகிதம் 12 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கார்களின் விற்பனையானது 2021-ம் நிதி ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2026-ம் நிதி ஆண்டில் 70 லட்சமாக உயரும். மாறாக, புதிய கார் சந்தைக்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் மிதமாக 10 சதவீதம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஎல்எக்ஸ் ஆட்டோஸ் இந்தியா நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித்குமார் கூறியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய கார் விற்பனையை விட இந்த கார்களின் விற்பனையானது 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக விலகல் என்னும் நிலையானது தற்போது பயன்படுத்திய கார் விற்பனை அதிக ரிப்புக்கு காரணமாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்த துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

ஓஎல்எக்ஸ் ஆட்டோஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சப்னா அரோரா கூறியதாவது:

ஓஎல்எக்ஸ் கிரிசில் ஆட்டோ நடத்திய இந்த ஆய்வு, பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரிவில் தொற்று நோய்க்குப் பிந்தைய சுற்றுச் சூழல் அமைப்பு, முக்கிய வளர்ச்சிக்கான தூண்டுதல்கள், சந்தை வாரியான பிரிவு, கோவிட் நுகர்வோர் நடத்தை, தற்போது உருவாகி வரும் போக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தரமான நுண்ணறிவுகள் உட்பட பலவற்றை விளக்குகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img