fbpx
Homeபிற செய்திகள்மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதாந் திர மின் கட்டண கணக்கீடு திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மின்சாரத் துறையில் 50,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் மின் சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களை சந்தித்தார்.அவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதன் பின் அவர் கூறியதாவது: மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் இந்த மக்கள் சபை கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள். நேற்று முதல் நாள் என்பதால் வெறும் 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் 3 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை கேட்டுள்ளனர். இந்த மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத் துறையில் உள்ள 50 ஆயிரம் காலிபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img