முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடி யா லிட் நிறுவனம், ஸ்மார்ட் வேர்ல்ட் மற்றும் கம்யூனிகேஷன் துறையின் பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் முன்னணி குழும நிறுவனமான, லார்சன் அண்டு டுப்ரோவுடன் (எல் அண்ட் டி) இணைந்து கூட்டு செயல்பாட்டில் ஈடு படுகிறது. அரசு ஒதுக்கீடு செய்துள்ள 5ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 5ஜி அலை வரிசை சோதனை ஒட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜியை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் சிட்டி பயன்களுக்கான பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.
கூட்டுச் செயல்பாடு மற்றும் 5ஜி சோதனை ஓட்டம் குறித்து வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் தலைமை நிறுவன வணிக அதிகாரி அபிஜித் கிஷோர் கூறு கையில், நீடித்த நிலையான ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் முயற்சியில் தொலைத்தொடர்பு திட்டங்கள் முதுகெ லும்பு போன்றவை ஆகும்.
5ஜி தொழில்நுட்பத்தின் வருகை, நகர்ப்புற வளர்ச்சியின் சவால்களை எதிர் கொள்வதற்கான புதிய வாய்ப்புகளையும், எதிர்காலத்தில் நீடித்த நிலையான ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்கான தொடக்கம் முதல் சந்தையில் அதன் பயன்பாடு அனைவருக்கும் சென்று சேரும் இறுதிகட்டம் வரையிலான முழுமையான தீர்வுகளையும் வழங்கும்.
5ஜி அடிப்படையிலான ஸ்மார்ட் சிட்டிக்கான தீர்வுகளை ஆராயவும், எதிர்கால நகரங்களை உருவாக்க உதவும் வகையிலான தீர்வுகளை கண்டறியவும், எங்களது ஒன்றிணைந்த நிபுணத்துவம் பயனுடையதாக இருக்கும் வகையிலும் லார்சன் அண்டு டுப்ரோவுடன் கூட்டு சேர்வதில் விஐ மிகுந்த மகிழ்ச்சி அடை கிறது என்றார்.
எல் அண்டு டி டிஃபென்ஸ் அண்டு ஸ்மார்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவரும் முழு நேர இயக்குநருமான ஜே. டி. பாட்டீல் கூறுகையில், சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் ஐஒடி மற்றும் தொலைத் தொடர்பு சேவையில் சமீபத்திய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் எல் அண்டு டி ஸ்மார்ட் வேர்ல்ட் உறுதியாக உள்ளது.
இந்தியாவின் பல நகரங்களில் வெற் றிகரமாக பல்வேறு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு ஐஒடி வாயிலான 5ஜி தொழில்நுட்ப சேவைகளை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வழங்கிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.



