fbpx
Homeபிற செய்திகள்சீரற்ற இதயத்துடிப்பை கட்டுப்படுத்த கருவி கோவை கேஎம்சிஎச்-ல் நிறுவப்பட்டது

சீரற்ற இதயத்துடிப்பை கட்டுப்படுத்த கருவி கோவை கேஎம்சிஎச்-ல் நிறுவப்பட்டது

கோவை சித்ரா பகுதியில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் என்ற கிரையோ அப லேசன் கருவி, தமிழகத்திலேயே முதன் முறையாக நிறுவப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது.
கேஎம்சிஎச் மருத்துமனை செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி கூறியதாவது:

அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, போன்ற உணர்வு, தலை சுற்றல் அறிகுறிகள் இருந்தால், உடலின் பிற பாகங்களுக்கு ரத்த ஓட்டம், சுழற்சியாவதை தடுக்கும்.

உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இந்த சீரற்ற இதயத் துடிப்பு உள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போது மருத்துவமனையில் நிறுவப் பட்டுள்ள இந்தக் கருவி அதிக வேகமாக இதயத்தின் துடிப்பு இருக்கும் போது, நுண்குழாய் செலுத்தி இதயத்திற்கு செல்லும் மின் சமிக்ஞைகளை கட்டுப்படுத்தி சரி செய்யும் தொழில் நுட்ப கருவியாக செயல்படுகிறது என்றார்.

கேஎம்சிஎச் மருத்துவமனை இதய மருத்துவர் தாமஸ் அலெக்ஸாண்டர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img