முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தார்.
உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உள்ளனர்.



