fbpx
Homeபிற செய்திகள்சாலையோர வியாபாரிகளுக்கு நிதி உதவி பெற்று தந்த திமுக பிரமுகருக்கு அடி உதை

சாலையோர வியாபாரிகளுக்கு நிதி உதவி பெற்று தந்த திமுக பிரமுகருக்கு அடி உதை

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் கபார்கான் என்பவரின் மகன் ரஹமத்துல்லா (39). இவர் அதே பகுதியில் கறி கடை நடத்தி வருகிறார்.

ரகமத்துல்லா திமுக கோவை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் அமைப்பாளராக இருந்து வருகிறார்.ஊரடங்கு காரணமாக பாதிக்கபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை ரஹமத்துல்லா அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாங்கிக்கொடுத்தார். இதுகுறித்து வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிக்கும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க பொறுப்பிலிருக்கும் அபுதாகிர் என்பவர எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு ரஹ்மத்துல்லாஹ் தனது கடையை பூட்டுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபுதாகிர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் ரகமத்துல்லாவிடம் தகராறில் ஈடுபட்டனர் .மேலும் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ரகமத்துல்லா வை தாக்கத் துவங்கினர். கத்தியால் குத்த முயன்றனர்.

ரகமத்துல்லா அங்கிருந்து காயங்களுடன் தப்பி ஓடினார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ரகமத்துல்லா போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபுதாகிர் ,அசாருதீன், காதர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img