fbpx
Homeபிற செய்திகள்வீட்டில் தீப்பிடித்து பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின், லேப்டாப் எரிந்து நாசம்!

வீட்டில் தீப்பிடித்து பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின், லேப்டாப் எரிந்து நாசம்!

கோவை காந்திபுரம் அலமு நகர் மூன்றாவது வீதியில் வசித்து வருபவர் நித்தியானந்தம். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.

அப்போது திடீரென சிலிண்டர் தீப்பிடித்து எரிய துவங்கியது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பாத்திரங்கள், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி அங்கிருந்த டேபிள் சேர்,லேப்டாப் ஆகியவற்றின் மீது பரவியது.

இதுகுறித்து உடனடியாக நித்தியானந்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img