fbpx
Homeதலையங்கம்தொடரட்டும் வேட்டை

தொடரட்டும் வேட்டை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணமோசடி செய்ததாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் வழங்கியதாக ரூ.16.58 லட்சம் மோசடி நடந்துள்ளது.

இதுதொடர்பாக சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படி தினந்தோறும் கூட்டுறவு சங்க மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவையெல்லாமே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்துள்ளது.

தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது இவை ஒவ்வொன்றாக வெளிவருகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த மோசடி நடந்துள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் இந்த மோசடி மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக துணை போய் உள்ளனர். அதன் காரணமாக இம்மோசடி புற்றீசல் போல் பெருகியுள்ளது.

இந்த மோசடிக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்கவும், குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பவும் இரும்பு கரம் கொண்டு தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. தொடரட்டும் வேட்டை.

படிக்க வேண்டும்

spot_img