fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் நீக்கம்- ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் நீக்கம்- ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 19ம் தேதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில் சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த சுமார் 24.5 லட்சம்(80 சதவீதம்) பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்திற்கு பிரத்யேகமாக ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் சமீரன் தெரிவித்து இருப்பதாவது:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் கீழ்கண்ட நெறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்.

மேலும், வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தவும் மேற்படி கடை மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை மேற்படி நிறுவனம், கடைகளின் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

திருமண மண்டபங்கள் மற்றும் விருந்து மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட் சியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், நிகழ்ச்சிகளின்போது அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை மண்ட பங்களின் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

கேரளா – தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி ,சோதனைச்சாவடி வழியாக கோவை மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கேரள மாநில மாணவர்கள் தினம் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதியில்லை.

அம்மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், விடுதிகளில் தங்கி பயிலும் கேரள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா இல்லை எனில் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுவர்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

மொத்த விற்பனை மார்க்கெட்டுகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்த விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை.

பொள்ளாச்சி மாட்டு சந்தை, உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது.மேற்படி, சந்தைகளில் வெளி மாநி லத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சப் கலெக்டர், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்.

தொடர் விதிமீறல்கள் கண்டறியப்படும் நிறுவனம், கடைகளுக்கு அபராதம் விதித்து, 7 நாட்கள் வரை மூடப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img