உலக அளவில் புது மையான ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம், தனது நீண்டகால ஆராய்ச்சிக்கு பின்னர், மேம்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க, தானே சுயமாக வடிவமைத்துள்ள புதிய ‘இமே ஜிங்சிப்வி1’ என்னும் புதிய சிப்பை சீனாவில் உள்ள ஷென்செனில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிமுக விழாவில் விவோ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியும் ,செயல் துணைத்தலைவருமான ஹுபைஷன் கூறியதாவது:
வி 1 என்பது முற்றிலும் ஒருங்கிணைந்த ஒரு சர்க்யூட்சிப்ஆகும்.
இது நல்ல தரமான மற்றும் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் முன்னேற்றத்தின் ஒரு முக்கிய மைல் கல்லைக் குறிக்கிறது.
விவோவின் இமே ஜிங்சிஸ்டம் வடிவமைப்பிற்கு ஏற்ப, இமேஜிங்சிப்வி 1 ஸ்மார்ட்போன் பயன்பாட்டு காட்சிகளான வியூபைண்டர் தோற்றம் மற்றும் வீடியோபதிவு போன்றவற்றை மேம்படுத்தும்.
இந்தசிப்பை விவோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள், கடந்த 24 மாதங்களாக ஆராய்ச்சி செய்து தயாரித்துள்ளனர்.
எங்களின் முன்னோக்கிய பயணத்தில் இந்தபுதிய வி1 சிப், புதுமையான படசெயலாக்க (ஐபி) தொழில்நுட்பத்தில் படஅமைப்பு, இயக்க முறைமை, தொழில்துறை வடிவமைப்பு மற்றும் செயல்திறன்ஆகிய 4 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
வாடிக்கையாளர்களின் சிறந்த புகைப்பட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக விவோ நிறுவனம் எக்ஸ்60 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த சிலமாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
2-வது பரிமாணமானது மொபைல் இமேஜிங் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்கும் பரஸ்பர ஆய்வு, அடுத்த நிலைதொழில் முறை புகைப்படம் எடுத்தல், வீடியோ கிராபி தொழில் நுட்பங்களின் முன்னேற் றத்திற்கு வழிவகுக்கிறது.



